யாழில் வயோதிபரை தாக்கி கொள்ளையிட்ட நபருக்கு 5வருட சிறை!


யாழ்ப்பாணம் - வரணி இயற்றாலை பகுதியில் தனிமையில் இருந்த வயோதிபரை தாக்கி 15பவுண் தங்க நகைகள் மற்றும் 10ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்த  மூவருக்கும் 5வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 3வருட கடுழிய சிறைத்தண்டனை விதிப்பு.

பாதிக்கப்பட்ட முதியவருக்கு தலா 50ஆயிரம் ரூபா வீதம் மூவரும் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபா நட்டஈடாக வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் பணித்தார்.

கடந்த வருடம் ஜீலை மாதம் வாடகை வாகனம் ஒன்றில் வரணிபகுதிக்கு வந்த ஆறுபேர் கொண்ட குழுவினர் தனிமையில் இருந்த முதியவரின் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

இதன் போது தாங்கள் வெளிநாட்டு இளைஞர்களை அனுப்பும் முகவர்கள் என தெரிவித்து தனிமையில் இருந்த முதியருக்கு கதை தொடுத்துள்ளனர். முதியவர் அசட்டையாக இருந்த நேரம் பார்த்து அவரை கடுமையாக தாக்கியதுடன் வாயில் துணியினை வைத்து கதிரையுடன் கட்டி வைத்து விட்டு நகை பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள நகைகடை உரிமையாளர் மற்றும் வாகனத்தினை வாடகைக்கு வழங்கிய நபர் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நகைகடை உரிமையாளரும் வாகன உரிமையாளரும் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் தாம் குற்றவாளி என குற்றத்தினை ஏற்றுக்கொண்ட மூவருக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூன்றாவது சந்தேக நபர் 2இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று ஆட்பிணையில் செல்ல நீதிவான் அனுமதி வழங்கினார்.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment