கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு யாழில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த புகையிரதமும் லான்ட் மாஸ்டர் வாகனமும் (சிறியரக உளவு இயந்திரம்) விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
அறிவியல்நகர் பகுதியில் உள்ள கடவையை லான்ட் மாஸ்டர் வாகனம் (சிறியரக உளவு இயந்திரம்) கடக்க முயன்றபொழுது கடவையில் இருந்த சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்
அத்துடன் சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால் இவ் வாரத்திற்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவாகும்.







0 comments:
Post a Comment