சாவகச்சேரியில் நேயமான சுற்றாடலை நோக்கிய பயணம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்போம்.என்ற கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரி நகரசபை மற்றும் சுகாதார வைத்திய பணிமனையினரும் இணைந்து விளிப்புணர்வு நடைபவனி ஒன்றை இன்றையதினம் காலை 9:30 மணிக்கு மீசாலைப்பகுதியிலிருந்து சாவகச்சேரி நகரசபை மண்டபம் வரை விழிப்புணர்வு நடைபவணியை நடத்தினர்.
பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்துவோம்.
இயன்றவரை பாவனையை குறைப்போம்.
மாற்றீடாக துணிப்பை கடதாசிப்பைகளை பாவிப்போம்.
தூய்மையான நகரத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.
திருவிழா கொண்டாட்டங்களில் இவற்றை தடுப்போம்.
சூழலுக்கு நேயமான கலாசாரத்தை வளர்ப்போம். என வலியுறுத்தி நடைபவனியில் ஈடுபட்டனர் இவ் பவனியில் சாவகச்சேரி நகரசபை முன்னால் உறுப்பினர்கள் செயளாலர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிராம சேவையாளர்கள் சுகாதார பரிசோதகர்கள் குடும்பநல உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.







0 comments:
Post a Comment