யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை அடித்துடைத்து 35ஆயிரம் ரூபா பொருட்சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் அதே பகுதியினை சேர்ந்த தாயும் மகனும் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு உறவுகளுக்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை மேற்படி தாயும் மகனும் இளைஞனின் வீட்டுக்கு அத்துமீறி நுழைந்த மோட்டார் சைக்கிளினை அடித்துடைத்திருந்தனர்.
இதனால் அதன் உரிமையாளருக்கு 35ஆயிரம் பொருட்சேதம் ஏற்பட்டிருந்தது. கடந்த 19ம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 20ம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில் தாயும் மகனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment