நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கல்!


யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இதன்போது 66 பேர் குருதி கொடை வழங்கினர்.

கத்தோலிக்கரின் தவக்காலத்தில் ஒறுத்தல் , பகிர்தல் , தியாகம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வது வழக்கம் அதன் பிரகாரம் இம்முறை நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் ஒன்றியத்தின் தவக்கால முன்னெடுப்பாக வன்னியில் இருக்கின்ற இறுதி யுத்தத்தில் பெற்றோரை இழந்த சிறார்களுக்கான மதிய பேசன விருந்து உபசாரமும் மகிழ்வூட்டும் நிகழ்வையும் முன்னெடுத்திருந்தனர், அதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம்(19) இரத்ததான நிகழ்வையும் முன்னெடுத்தனர்.ஆன்மீக ரீதியான செயற்பாடாக வவுனியாவில் உள்ள கல்வாரி யாத்திரை ஸ்தலத்திற்கான யாத்திரை பயணத்தையும் மேற்கெள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இளைஞர்களின் சமூக செயற்பாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் ஆன்மீக செயற்பாடுகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.






Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment