மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற சத்தியாகக்கிரக போராட்டத்தின் 31 ஆவது நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததான நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு வெபர் வீதியிலுள்ள கத்தோலிக்க மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் இடம்பெற்றது
வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை வழங்கு மாறு வலியுறுத்தி காந்தி பூங்காவின் முன்பகுதியில் தொடர்ந்து காலைவரையறையற்ற சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு இன்று வியாழக்கிழமை 31 நாட்கள் முடிவடையும் நிலையில் ரத்ததானம் வழங்க ஏற்பாடு செய்தனர்.
சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நூற்றுக்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அங்கு சவப்பெட்டியை வைத்து போரட்டத்தில் ஈடுபட்டபின்னர் ஊர்வலமாக் ரத்ததான வழங்குவதற்காக கத்தோலிக்க மறைக்கல்வி நடுநிலைய மண்பத்திற்கு சென்று ரத்தத்தை தானமாக வழங்கி தமது போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment