சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டார்!


களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் சிலர் போலியான கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்ளுக்கு சந்தேகநபர்களின் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை கண்காணிப்பதற்காக இரண்டு விசேட பொலிஸ் குழுக்களை விமான நிலையங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தரவின் விசேட கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து கடுவல நீதவான் நீதிமன்றம் நோக்கி கடந்த 27 ஆம் திகதி கைதிகளை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதிகள் ஐவரும், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான சமயங் என அழைக்கப்படும் அருண உதயசாந்த பத்திரணவும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment