இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.
பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற வங்கதேச டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி தழுவியதையடுத்து இலங்கை கிரிக்கெட் இறந்து விட்டதாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையின் பிரபல ஆங்கில நாளிதழான தி ஐலண்ட்.
அந்தச் செய்தியில் “RIP Srilanka” என்று தலைப்பிட்டு, ‘மார்ச் 19-ம் தேதி சரா ஓவல் மைதானத்தில் மரணமடைந்த இலங்கை கிரிக்கெட் குறித்த உணர்ச்சிகரமான நினைவுகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டு சாம்பல் வங்கதேசத்துக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்று கடுமையான விமர்சனத்துடன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment