கம்பீர்,உத்தப்பா அதிரடியில் கொல்கத்தாவுக்கு இன்னுமொரு வெற்றி, டெல்லிக்கு மற்றுமொரு தோல்வி!


இன்று(28) பிற்பகல் இலங்கை நேரப்படி நான்கு மணிக்கு ஆரம்பமானது பத்தாவது ஐபிஎல் போட்டியின் முப்பத்து இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி சஞ்யூ சம்சனின் அரைச்சத உதவியுடன் இருபது ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சம்சன் நான்கு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் அடங்கலாக 38 பந்துகளில் 60 ஓட்டங்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நாதன் கட்டர் நில் மூன்றுஇலக்குகளையும் நரைன் யாதவ் தலா ஒவ்வொரு இலக்கையும் சாய்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தாவுக்கு ஆரம்பம் சறுக்கினாலும் பின்னர்களம் புகுந்த உத்தப்பா மற்றும் கம்பீர் ஜோடி வெற்றியை உறுதி செய்தது. துடுப்பாட்டத்தில் கம்பீர் 11 பவுண்டரிகள் அடங்கலாக 52 பந்துகளில் 71 ஓட்டங்களையும் உத்தப்பா ஐந்து பவுண்டரிகள் நான்கு சிக்சர் அடங்கலாக 33 பந்துகளில் 59 ஓட்டங்களையும் பெற்றனர்.இறுதியில் கொல்கத்தா ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் ரபடா மூன்று இலக்குகளை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக கம்பீர் தெரிவானார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment