அஜித்தின் மாஸ் காட்டும் 'விவேகம்' புகைப்படம்!


அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகிவருகிறது, 'விவேகம்' திரைப்படம். இந்தப் படத்தில் வில்லனாக, பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம், விவேக் ஓபராய் நடித்துள்ளார். இது, அஜித் நடிக்கும் 57-வது திரைப்படமாகும். அஜித் - சிறுத்தை சிவா காம்போவில் 'வீரம்', 'வேதாளம்'  வரிசையில் 'விவேகம்' ஹாட்ரிக் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் எனத் தொடர்ச்சியாக படம் குறித்த ஏதோ ஒரு விஷயம் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. இதனால், அஜித் ரசிகர்கள் மத்தியில் விவேகம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு, கிழக்கு ஐரோப்பாவில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அங்கு இருக்கும் ராணுவத் தளத்தில் ஷூட்டிங் நடந்துவருகிறதாம். அந்த இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் பக்கத்தில் அஜித் நிற்கும் புகைப்படம் தான் தற்போது, விவேகம் ஃபீவரை மேலும் கூட்டியுள்ளது.

ஆகஸ்ட் 10-ம் தேதி, விவேகம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment