இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ICC சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சனத் ஜெயசூரிய இந்த அணியை அறிவித்தார்,
உபாதைகளால் அவதிப்பட்ட அணித்தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள நிலையில் மத்தியூஸ் மீண்டும் இலங்கை அணியின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளார்.உதவித்தலைவராக உப்புல் தரங்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்-அஞ்சேலோ மத்தியூஸ் (தலைவர்). உப்புல் தரங்க (உதவி தலைவர்),தினேஷ் சந்திமால், நிரோஷான் டிக்வெல்ல, குசல் ஜனித்த பெரேரா,குசல் மெண்டிஸ்,சாமர கப்புகெதர, அசேல குணரத்ன,லசித் மலிங்க,சுரங்க லக்மால் ,நுவான் பிரதீப்,நுவான் குலசேகர, திஸ்ஸர பெரேரா,லக்ஷன் சந்தகன், சீக்குகே பிரசன்னா
மேலதிக வீரர்கள்-டில்ருவான் பெரேரா, தனுஷ்கா குணதிலக்க
தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியினரோடு மேலதிகமாகவும் 5 வீரர்கள் (விக்கும் சஞ்சய், லஹிரு குமார, மிலிந்த ஸ்ரீவர்தன,சச்சித் பத்திரண, அகில தனஞ்சய ) பெயரிடப்பட்டுள்ளனர்,கொழும்பில் இடம்பெறவுள்ள இலங்கை அணியின் பயிற்சி நடவடிக்கையின் போது இவர்களும் அணியில் இணைத்து செயல்படவுள்ளதாகவும், தேவையேற்பட்டால் மட்டும் அவர்கள் உள்வாங்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

0 comments:
Post a Comment