IPL இன் மாபெரும் இறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணியும், ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிகள் பங்கெடுத்துள்ளன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பாய் இந்தியன்ஸ் அணியினர் முதலில் துடுப்பாடி வருகின்றனர். ஆயினும் வேகமாக ஆரம்ப வீரர்களை மும்பாய் இந்தியன்ஸ் இழந்து வேகமாக பறிகொடுத்தது.
அதன் பின்னர் வந்த வீரர்களும் சரியான ஒத்துழைப்பை வழங்காத நிலையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்த மும்பாய் இந்தியன்ஸ் அணி இறுதியில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. குருநால் பாண்டியா 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் தமிழக வீரர் சுந்தர் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுக்க ஜெயதேவ் உனட்கட், ஆடம் சம்பா, டானியல் கிறிஸ்ட்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
மும்பாய் இந்தியன்ஸ் அணியினர் இந்த IPL பருவ காலத்தில் விளையாடிய மொத்தமான 16 போட்டிகளில் 5 தோல்விகளை மட்டுமே தழுவியிருந்தாலும், அதில் 3 தோல்விகள் இந்த ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் பெற்றவையாகும்.
இன்றைய நாளிலும் தோல்வியை தழுவுவார்களாக இருந்தால் மொத்தமான 4 தோல்விகள் என்கின்ற சோகமான நிலைமைக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணி தள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையான IPL தொடர்களில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பாய் அணி 2 கிண்ணங்களை வெற்றிகொண்டுள்ளது. ஸ்மித் தலைமையிலான அணிக்கு இது முதல் கிண்ணமாக எதிர்பார்க்கப்பட்டாலும், டோனி அங்கம் பெற்றுள்ள IPL அணிக்கு கிடைக்கும் 3 வது கிண்ணம் எனும் காரணத்தால் டோனி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


0 comments:
Post a Comment