`விவேகம்', `விஸ்வரூபம்-2', `2.0' படங்கள் எப்போது ரிலீஸ்?



ஆகஸ்ட் 10 - ம் தேதி  ‘விவேகம்’

வெவ்வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துவந்த அஜித், தற்போது ‘வீரம்’ ‘வேதாளம்’  ‘விவேகம்’ எனத் தொடர்ந்து  ஒரே இயக்குநருடன் பணியாற்றிவருவது ஆச்சர்யமான உண்மை. எப்போதும் திட்டமிட்ட ஷூட்டிங், வேகமான வேலைவடிவமைப்பு ஆகியவையே இயக்குநர் சிவாவின் ஸ்பெஷல் குவாலிட்டிஸ். ஐரோப்பாவிலிருந்து சென்னைக்கு வந்து ஒருசில நாள்களே ஓய்வெடுத்த சிவா, அடுத்து எடிட்டிங், டப்பிங், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் எனப் பரபரப்பாகிவிட்டார். ‘விவேகம்’ படத்தை ஆகஸ்ட் மாதம் எப்படியும் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என, சுறுசுறுப்பாக வேலைபார்த்து வருகிறார். சத்யஜோதி நிறுவனம் சார்பில் தயாரிக்கும் இந்தத் திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகியிருப்பதால் உற்சாகத்தில் திளைத்துவருகிறார், ஆர்.எம்.வீரப்பனின் மாப்பிள்ளையான தியாகராஜன்.

தீபாவளிக்கு ‘விஸ்வரூபம்-2’

பிரமாண்டமாக வெளிவந்து, உலக அளவில் வசூலையும் பிரமிப்பையும் ஒருசேரக் குவித்த ‘பாகுபலி-2’ திரைப்படம், கமலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ‘விஸ்வரூபம் -2’ படத்தை உசுப்பிவிட்டுள்ளது. ஏற்கெனவே படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள்தான் இழுத்துக்கொண்டிருக்கின்றன. ‘விஸ்வரூபம் -2' வெளியீட்டில் இடையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் ‘பாகுபலி -2' படத்தின் வெற்றி ‘விஸ்வரூபம் -2' யூனிட்டுக்கு உற்சாக டானிக்கை ஊற்றிக்கொடுத்துள்ளது. படத்தை மென்மேலும் மெருகேற்றும் பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் கமல். ` ‘விஸ்வரூபம்-2' படத்துக்காக மேலும் 10 நாள்கள் ஷூட்டிங் நடத்தலாமா?' என்ற யோசனையில் இருக்கிறார் கமல். அக்டோபர் மாதம் 13-ம் தேதி, தீபாவளி  விருந்தாக ‘விஸ்வரூபம்-2' படத்தை ரிலீஸ் செய்வதற்கு, தயாரிப்புத் தரப்பும் கமலும் பரபரப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

2018 ஜனவரி 26 - தேதியில் ‘2.0’
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment