யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடற்பகுதியில் 8 கடல் மைல் தொலைவில் அநாதரவாக காணப்பட்ட பொதிக்குள் இருந்து 9.3 கிலோ ஹெரோயின் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றிய ஹெரோயின் மதிப்பு சுமார் 90 கோடி என காங்கேசன்துறை பொலிஸாரால் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினரின் கரையோர பாதுகாப்பு பிரிவினராலேயே இந்த ஹெரொயின் பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஹெரொயின் பொதி காங்கேசன்துறை பொலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கடல் படை அதிகாரியிடம் வினவிய போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்படையின் கப்பல் வருவதை கண்ட கடத்தல்காரர்கள், தப்பிக்கும் நோக்கில் பொதியினை கடலில் போட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர் என ஊகிக்க முடிகின்றதாக கூறினார்.
அத்துடன் இப்பொதியானது இலங்கை கடற்பரப்பில் பிடிபட்டதனால், இது வெளியிடத்தில் இருந்து இலங்கை நோக்கி கொண்டுவரும் வேளை கடத்தல்காரர்கள் கடலில் போட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என ஊகிக்க முடிகின்றதெனவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment