யாழ்ப்பாணம் - நுணாவில் - A9 வீதியில் இராணுவ வாகனம்,மினிபஸ்,பட்ட ரக வாகனம், சிற்றூர்தி மற்றும் உந்துருளி ஆகியன மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து இன்று பிற்பகல் 3.15 அளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கனகம்புளியடி - நுணாவில் வீதியிலிருந்து ஏ 9 வீதிக்கு பயணிக்க முயன்ற இராணுவ வாகனம் ஏ 9 வீதியில் பயணித்த பட்ட ரக வாகனத்துடன் மோதுண்டது.
இதன்போது இராணுவ வாகனம், பேரூந்து தரிப்பு நிலையத்தின் தரித்து நின்ற பயணிகள் போக்குவரத்து மினிபஸ், வீதியில் பயணித்த சிற்றூர்தி மற்றும் உந்துருளி ஆகியவற்றையும் மோதியுள்ளது.
சம்பவத்தில், பட்டா ரக வானகத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

















0 comments:
Post a Comment