கோப்பாயில் விபத்து வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர் பலி!


கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்  பலியாகியுள்ளார்.

இன்று இரவு 7.00மணியளவில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோப்பாய் சந்திக்கு அருகாமையில் பயணித்த கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கனரக வாகனத்தைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தனது கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனத்தின் சக்கரங்களுக்குள் அகப்பட்டு பலியாகியுள்ளார்.

இந்த விபத்தில் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த ரட்ணகோபால் எனும் 63 வயதான வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment