10 வது IPL தொடரின் நேற்று(03) இடம்பெற்ற 41 வது போட்டியில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியும், காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் போட்டியிட்டன.
கொல்கொத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் முதலில் ஆடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை சந்தித்தது.
அந்த அணிசார்பில் நரைன் ௦, காம்பிர் 24 , செல்டன் ஜாக்சன் 10 ,மனிஷ் பாண்டே 37 , கிராண்ட்கோம் 36 ஓட்டங்கள் என்று குறைந்த ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர். ஆயினும் சூரியகுமார் யாதவ் ,ஜெயதேவ் உனடிக்டின் 19 வது ஓவரில் 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள, கொல்கொத்தா அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள் பெற்றது.
பந்துவீச்சில் தமிழக வீரர் வொசிங்டன் சுந்தர் 2 , ஜெயதேவ் உனட்கட் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு இலகுவான 156 எனும் இலக்குடன் களம் புகுந்த ஸ்மித் தலைமையிலான ரைசிங் பூனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணி அதிரடியாக ஆரம்பித்தாலும் இறுதி நேர சிறப்பான பந்து வீச்சால் சற்றே தடுமாறி 19.2 ஓவர்கள் நிறைவில் வெற்றிபெற்றது.
துடுப்பாட்டத்தில் தனித்து நின்று போராடிய திருபாதி 93 ஓட்டங்களைப் பெற்று இறுதி நேரத்தில் ஆட்டமிழந்தார். மற்றைய வீரர்கள் சிறப்பான முறையில் இவருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இன்றைய வெற்றி மூலமாக பூனே அணி 11 வது போட்டியில் 7 வது வெற்றியையும், கொல்கொத்தா அணி 11 வது போட்டியில் 4 வது தோல்வியையும் பெற்றுக்கொண்டன.
இன்று 42 வது போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் போட்டியிடவுள்ளன.

0 comments:
Post a Comment