கேரளாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், 'புலிமுருகன்'. வைஷாக் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, நமிதா, ஜெகதிபாபு, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 35 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட 'புலிமுருகன்' திரைப்படம், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்தது.
தற்போது, இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லர், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment