ஆனைக்கோட்டைப் பகுதியில் 2005ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் 23 வயதுடைய இளைஞன் தனது காதலியான 16வயதுப் பெண்ணுடன் தலைமறைவானார். இதனால் அவர்மீது கடத்தல் மற்றும் வன்புணர்வு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்றையதினம் யாழ். மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞனுக்கு ஆட்கடத்தல் , வன்புணர்வு என்னும் குற்றங்களுக்காக தனித்தனியே 5 வருட ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு நட்டஈடாக 25 ஆயிரம்ரூபா வழங்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்று 12 வருடங்களின் பின் குறித்த வழக்கு இன்று(23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் சமூகமளித்திருக்கவில்லை. வாதியும் பிரதிவாதியும் தற்போது வேறு நபர்களை மணம் முடித்து குழந்தைகளோடு வசிக்கின்றனர். இதனாலேயே குறித்த பெண் மன்றுக்கு வரமுடியவில்லை என சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதேவேளை மன்றில் ஆயராகியிருந்த குறித்த பிரதிவாதியின் தாயார் தமக்கு நட்டஈடு வேண்டாம் எனவும் தனது மகள் வேறு திருமணம் முடித்து குழந்தைகளோடு வாழ்வதால் அவரால் மன்றிற்கு சமூகமளிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

0 comments:
Post a Comment