சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலே வெற்றி வாகை சூடும் அணிக்கான பரிசிலை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி வெற்றி பெறும் அணி 2.2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் சொந்தக்காரராக மாற முடியும்.
அதே போல இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அரையிறுப் போட்டியில் தோல்வியடையும் இரு அணிக்களுக்கும் தலா 450,000 அமெரிக்க டொலர்களும், குழு நிலையில் மூன்றாம் இடத்தினைப் பெறும் அணி ஒவ்வொன்றுக்கும் தலா 90,000 அமெரிக்க டொலர்களும், மேலும் குழு நிலையில் இறுதி இடத்தினைப் பெறும் அணிக்கு தலா 60,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
மொத்தமாக அணிகளுக்கு கிடைக்கும் மொத்தப் பணப்பெறுமதி 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். கடந்த முறை சம்பியன்ஸ் தொடரினை் பெற்றுக் கொண்ட இந்திய அணியினை விட இந்த முறை சம்பியன்ஸ் கிண்ணத்தினைக் கைப்பற்றும் அணி மேலதிகமாக 50000 அமெரிக்க டொலர்களினைப் பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
FacebookTwitterFacebook MessengerWhatsAppViberShare53

0 comments:
Post a Comment