10 வது IPL போட்டி தொடரின் நேற்று(30) இடம்பெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன்களான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் மற்றும் காம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிட்டன.
போட்டியில் முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, அந்த அணியின் ஆரம்ப வீரர்களான தவான் மற்றும் வோர்னர் ஆகியோர் அதிரடியாக விளையாடி கடந்த பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி போன்று சத இணைப்பாட்டம் புரிந்து நல்ல ஆரம்பம் கொடுக்க, சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்கள் பெற்றது.
அணித்தலைவர் வோர்னர் 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கலாக 59 பந்துகளில் 126 ஓட்டங்களையும், வில்லியம்சன் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு 210 எனும் இலக்குடன் களம் புகுந்த கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்கள் மட்டுமே பெற்றது.
ரொபின் உத்தப்பா 53 ஓட்டங்கள் பெற்றார். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் ,மொஹமட் சிராஜ் , சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
சான் ரைசர்ஸ் அணி ௪௮ ஓட்ட்ங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் ஆடட நாயகன் விருதை வோர்னர் பெற்றுக்கொண்டார்.
அத்தோடு 4 மணிக்கு இடம்பெற்ற போட்டியில் டெல்லி அணியை வெறுமனே 67 ஓட்டங்களுக்குள் ஆட்டம் இழக்க செய்த பஞ்சாப் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

0 comments:
Post a Comment