ஜெர்மனியை விரட்டிய ரஷ்யா..இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் புடின்!


இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றத்தின் 72-ஆம் ஆண்டு நினைவு தின பேரணி ரஷ்யா தலைநகரான மாஸ்கோ நகரில் வரும் 9-ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதற்காக தங்கள் நாட்டின் இராணுவ பலத்தை காட்ட வேண்டும் என்பதில் புடின் தீவிரமாக உள்ளதாகவும், அதன் காரணமாக இராணுவ வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயிற்சியின் போது ஆயிரத்திற்கும் மேலான இராணுவ வீரர்கள கலந்து கொண்டனர்.

அதுமட்டுமின்றி 70-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவைகளும் இதில் உள்ளடங்கியதாக கூறப்படுகிறது.

ரஷ்யா உலகின் மிகப்பெரிய இராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளதாகவும், அதன் பெயர் Mi-26 எனவும் குறித்த தினத்தன்று பேரணி நிகழ்ச்சியின் போது பங்குபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்கள் பயிற்சியின் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் முதல் உலகப்போரின்போது ஜெர்மனியிடம் தோற்றுப் போன ரஷ்யா, இரண்டாம் உலகப்போரின் போது இரும்பு மனிதர் ஸ்டாலின் தலைமையில் ரஷ்ய மக்கள் விஸ்வரூபம் எடுத்து ஹிட்லருக்கு சரியான பதிலடி கொடுத்தனர்.

ஜெர்மனி இராணுவத்தை ஓட ஓட விரட்டி வெற்றி கண்டது ரஷ்யா. காரணம் இயற்கை ரஷ்யர்களுக்கு சாதகமாக அமைந்ததே. இந்த வெற்றியை ரஷ்யா உற்சாகமாக பல நாட்டுத் தலைவர்களை அழைத்து கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.













Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment