யாழ்.சாவகச்சேரியில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுகிழமை) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு உந்துருளிகளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன், ஆட்டோச் சாரதியான 24 வயதுடைய நாகசாமி நந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய  22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவரகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். குறித்த  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment