ஐ.பி.எல் போட்டிகளில் 150 விக்கட்டுக்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பெற்றுள்ளார்.
ஐ.பி.எல் பத்தாவது சீசனில் நேற்றுமுன்தினம்(06) இடம்பெற்ற போட்டியில் டெல்லி அணியும் மும்பை அணியும் மோதின.
இதில் 213 என்ற ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ஓட்டங்களில் விக்கட்டுக்களை பறிகொடுத்து வௌியேறியதால் 66 ஓட்டங்களை மட்டுமே பெற்று அனைத்து விக்கட்டுக்களையும் இழந்திருந்தனர்.
அதன்படி, 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
இதில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் மலிங்க 2 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் வழங்கிய நிலையில் , 2 முக்கிய விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 150 விக்கட்டுக்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை மலிங்க பெற்றுள்ளார்.

0 comments:
Post a Comment