ஹரன் ஷர்மாவின் சுழலில் சுருண்டது கொல்கத்தா!


10 ஆவது ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது தகுதிப்போட்டியில் (Qualifier 2)
மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைற்றைடேர்ஸ் அணிகள் மோதின.
நேற்று(19) எட்டு மணி ஆட்டமாக பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணித்தலைவர் ரோகித் ஷர்மா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

முதலில் துடுப்பெடுத்தாட களம்புகுந்த கொல்கத்தா அணி பூம்ரா, ஜோன்சன் மற்றும் ஹரன் ஷர்மாவின் துல்லிமான பந்து வீச்சால் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஒரு கட்டத்தில் 31 ஓட்டங்களுக்கு ஐந்து இலக்குக்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த சூரியகுமார் ஜாதவ் மற்றும் ஜகி ஆகியோர் ஆறாவது விக்கட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் அதன் பின்னர் இறுதி நான்கு இலக்குக்களும் 20 ஓட்டங்களுக்குள் சரிக்கப்பட 18.5 பந்துப்பரிமாற்றங்களில் 107 ஓட்டங்களுக்குள் சுருண்டது கொல்கத்தா அணி.
கொல்கத்தா அணி சார்பாக சூரியகுமார் ஜாதவ் 31 ஓட்டங்களையும் ஜகி 28 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஹரன் சர்மா பதினாறு ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து நான்கு இலக்குக்களை கைப்பற்றினார். பூம்ரா, ஜோன்சன் மற்றும் மலிங்க ஆகியோர் முறையே 3, 2, 1 இலக்குக்களை கைப்பற்றினார்கள்.

108 என்ற இலகுவான இலக்கை நோக்கிப் பதிலளித்த மும்பை அணி ஒரு கட்டத்தில் 34 ஓட்டங்களுக்குள் மூன்று இலக்குக்களை இழந்து தடுமாறியது. எனினும் அதன் பின் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் ரோகித் சர்மா-ஹுருணால் பாண்டியா இணை நான்காவது இலக்கில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஸ்திரப்படுத்தியது.

அதன் பின்னர் களம் நுளைந்த கெரன் போலாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 6 விக்கட்டுக்களால் இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுளைந்தது மும்பை அணி.

மும்பை அணி சார்பாக ஹுருணால் பாண்டியா 42 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் கொல்கத்தா சார்பாக பியூஷ் சாவ்லா 2 இலக்குக்களையும் உமேஷ் யாதவ் மற்றும் நாதன் ஹுட்டர் நைல் தலா ஒரு இலக்குக்களையும் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக மும்பை அணியின் ஹரன் ஷர்மா தெரிவானார்.

இந்தப்போட்டியில் பெற்றுக் கொண்ட 26 ஓட்டங்களின் மூலம் மும்பை அணிக்காக 3000 ஓட்டங்களைப் பெற்ற முதலாவது வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்தார்.

இவ் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நாளை  ஐதராபாத்தில் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பூனே சுப்பர் ஜயன்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment