வவுனியாவில் ரயில் விபத்தில் இருவர் பலி!


வவுனியா – புதூர் செல்லும் வீதியிலுள்ள ரயில் கடவையில் ரயிலுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 1.35 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் வவுனியா புதூர் பகுதியில் இருந்து புளியங்குளம் நோக்கி பயணித்த உழவியந்திரத்துடன் மோதுண்டுள்ளது.

இதன்போது உழவியந்திரத்தை செலுத்திய புளியங்குளத்தை சேர்ந்த 19 வயதுடைய ஜெயநாதன் ரஜிதன் மற்றும் 21 வயதுடைய ரவீந்திரன் கீர்த்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த ரயில் கடவை பாதுகாப்பற்றது என பல தடவைகள் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தினரால் ரயில்வே திணைக்களத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையிலும் ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இரு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment