மின்சார கட்டண முறையில் மாற்றம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை!


இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மின் பாவனையாளர்களுக்காகப் புதிய கட்டண முறையொன்றை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சார சபை சமர்ப்பித்துள்ள ஆலோசனைக்கு அமைய பொதுமக்கள் நுகர்வோர் ஆணைக்குழு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைவாக, மின்சார பாவனையாளர்கள், மின்சாரத்தைப் பயன்படுத்தும் கால நேரத்துக்கு இடையில் தேவையான வகையில் மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.

அதாவது, இரவு 10.30 முதல் காலை 5.30 வரை ஒரு அலகுக்காக அறவிடப்படும் தொகை 13 ரூபாயாகும். காலை 5.30 முதல் மாலை 6.30 வரை ஒரு அலகுக்காக அறவிடப்படும் தொகை 25 ரூபாயாகும்.  மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை பயன்படுத்தப்படும் ஒரு மின் அலகுக்காக கட்டணம் 54 ரூபாயாகும்.

இந்த முறையில் நாள் ஒன்றுக்கு அதிக மின்சார தேவை காணப்படுகின்ற மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரையிலான காலப்பகுதியினுள் மின்சார பயன்பாட்டை குறைத்துக் கொள்வதே இதன் எதிர்பார்ப்பாகும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment