10 வது IPL தொடரின் நேற்று(17) இடம்பெற்ற முக்கிய Play Off போட்டியில் கம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் வோர்னர் தலைமையிலான சன் அரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன.
போட்டியில் தோல்வியை தழுவும் அணி, இந்தாண்டுக்கான IPL தொடரிலிருந்து வெளியேற்றப்படும் என்ற காரணத்தால் இந்தப் போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காம்பிர் முதலில் களத்தடுப்பு முடிவை அறிவித்தார், அதன்படி முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் அணி எதிர்பார்க்காத விதத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.துடுப்பாட்டத்தில் வோர்னர் 37 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 22 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் கோல்டர் நைல் 3 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 129 எனும் இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து கொல்கொத்தா அணி துடுப்பாட தயாரான நிலையில் போட்டியை மழை குறுக்கிட்டது.இந்தப் போட்டிக்காக மேலதிக நாள் ஏதுவும் ஒதுக்கப்படாத காரணத்தினால்
குறைந்த பட்சம் கொல்கத்தா அணி ஐந்து பந்துப்பரிமாற்றங்களாவது துடுப்பெடுத்தாட வேண்டும். அவ்வாறு துடுப்பெடுத்தாடினால் 41 ஓட்டங்கள் வெற்றியிலக்காக அமையும்.
ஐந்து ஓவர் ஆட்டமும் சாத்தியமாகவிடின் Super over முறை மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும்.
Super over முறையும் சாத்தியமாகவிடத்து புள்ளியடிப்படையில் 17 புள்ளிகளைப் பெற்றுள்ள சன்ரைசேர்ஸ் அணி மும்பை அணியை எதிர்த்தாட தகுதி பெறும் என்ற நிலைமை காணப்பட்ட்து.
ஆயினும் மழை ஓய்ந்து போட்டி ஆரம்பித்த நிலையில் டக் வொர்த் லூயிஸ் முறைமூலமாக 6 ஓவர்களில் 48 ஓட்ட்ங்கள் எனும் வெற்றி இலக்கு கொல்கொத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட்து.
முக்கிய 3 விக்கெட்டுக்கள் வேகமாக சரிக்கப்படடாலும் அணித்தலைவர் காம்பிர் ஆட்டம் இழக்காது 32 ஓட்டங்கள் பெற்று 4பந்துகள் மீதமிருக்க கொல்கொத்தாவின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
கொல்கொத்தா வெற்றி பெற்றது.இதன் மூலமாக கொல்கொத்தா அணி மீளவும் நாளையத்தினம் மும்பை அணியை சந்திக்கும் வாய்ப்பு பெற்றுள்ளது.
இந்த இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் 21 ம் திகதி IPL இறுதி போட்டியில் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜியன்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment