IPL தொடரிலிருந்து நடப்பு சாம்பியன்கள் வெளியேறுமா-நெருக்கடி கொடுக்கும் கொல்கத்தா!


10 வது IPL தொடரின் இன்று(17) இடம்பெற்ற முக்கிய போட்டியில் கம்பிர் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் வோர்னர் தலைமையிலான சன் அரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியிட்டன.

இன்றைய போட்டியில் தோல்வியை தழுவும் அணி, இந்தாண்டுக்கான IPL தொடரிலிருந்து வெளியேற்றப்படும் என்ற காரணத்தால் இந்தப் போட்டி அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காம்பிர் முதலில் களத்தடுப்பு முடிவை அறிவித்தார், அதன்படி முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் அணி எதிர்பார்க்காத விதத்தில் தடுமாற்றத்தை சந்தித்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.துடுப்பாட்டத்தில் வோர்னர் 37 ஓட்டங்களையும், தமிழக வீரர் விஜய் சங்கர் 22 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் கோல்டர் நைல் 3 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 129 எனும் இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment