சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நினைவுகூரலும், ஊடக அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும் யாழில் இடம்பெற்றது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) குறித்த இரு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
யாழ். பிரதான வீதியிலுள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு முன்னால் கூடிய ஊடகவியலாளர்கள் மறைந்த ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில் மலரஞ்சலி செலுத்தி, ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து, யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய ஊடகவியலாளர்கள் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும் போராட்டமொன்றினையும் முன்னெடுத்திருந்தனர்.
ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஊடக அடக்கு முறை நிறுத்தப்பட வேண்டும், படுகொலைகள், காணாமல் ஆக்கப்படல் போன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நீதி விசாரணை வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வுகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட. மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட. மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வட. மாகாண சபையின் உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ். வணிகர் கழகப் பிரதிநிதிகள், சட்டவாளர்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment