லொறி குடைசாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு!


ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வுட்லேன்ட் பகுதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வுட்லேன்ட் பகுதியில்  (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

வெலிமடையிலிருந்து கொழும்பிற்கு 26,730 கிலோகிராம் தேயிலை தூளை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், லொறியை வீதியிலிருந்து அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக ஹற்றன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததனால் அரச ஊழியர்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பல சிரமங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment