யாழில் கூட்டு பாலியல் வன்புணர்வு முயற்சி : மாணவியின் சாதுரியத்தால் முறியடிப்பு!


யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று  பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து  கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை 7.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பகுதியான மல்லாகத்தில் 18 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவியொருவர் பாடசாலைக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார்.

இதன்போது வெள்ளைநிற வேனில் கும்பலொன்று குறித்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளது.

இவ்வாறு பின்தொடர்ந்து சென்ற 6 பேர் அடங்கிய கும்பலானது குறித்த மாணவி வீதியினை கடப்பதற்காக மஞ்சள் கோட்டினை அண்மித்த போது வேனில் சென்ற கும்பலானது மாணவியை இழுத்து வேனுக்குள் போட்டுக்கொண்டு கடத்தி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவியை வேனுக்குள் வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் அம் மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன் மாணவிக்கு அருந்துவதற்கு ஏதோ ஒரு பானத்தையும் கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் குறித்த மாணவி அவ் கடத்தல்காரர்களுடன் கடுமையாக போரிட்டதுடன் அவர்கள் அருந்த கொடுத்த பானத்தையும் தட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கடுமையாக முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த கும்பலானது அம் மாணவியை கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியில் வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வேனில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி கீழே வீழ்ந்ததால் அவரது காலில் காயமொன்று ஏற்பட்டதுடன் அவ்விடத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சிலர் அம் மாணவியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு காயத்திற்கு மருந்துகள் கட்டப்பட்டிருப்பதாகவும் அவரை மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை,

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த கடத்தல் சம்பவமானது காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிபளை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளமையால் இது தொடர்பான விசாரனைகள் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment