யாழ்ப்பாணம் நெல்லியடி புலவரோடை பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (26) குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் தனது காணியில், நேற்றுமுன்தினம்(25) மாலை, தென்னை மரங்களுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை தோண்டிய நிலையில் வெடிபொருள் என சந்தேகிக்கும் வகையிலான பொருள் ஒன்று தென்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் அவற்றை பார்வையிட்ட பின்னர், அதிரடிப் படையினரை வரவழைவத்து இன்று (26) குறித்த வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள் என நெல்லியடிப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இப்பகுதியில் முன்னர் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்று இப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இவ்வெடிபொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


0 comments:
Post a Comment