புத்துயிர் பெற்ற நொக்கியாவின் 3310: புதிய வசதிகள் என்னவென்று தெரியுமா? (VIDEO)



பார்சலோனாவில் நடைபெறும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் முன்னோடி நிகழ்வில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமது கைப்பேசிகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின் தொழில்நுட்ப சந்தையில் கால் பதிக்கும் நொக்கியாவின் ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி குளோபல் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. பின்லாந்தை சேர்ந்த எச்.எம்.டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஏற்கனவே சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நொக்கியா 3310பீச்சர் போனையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேம்படுத்தல்களுடன் காட்சியளிக்கும் நோக்கியா 3310 நான்கு கவர்ச்சிகர நிறங்களில் கிடைக்கிறது. ஒரு மாத கால பெட்டரி ஸ்டேன்ட்பை, மேம்படுத்தப்பட்ட பழைய ஸ்நேக் கேம்  உள்ளிட்டவை கொண்டுள்ள புதிய நொக்கியா 3310 இன் விலை 49 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment