இந்தியாவின் பணக்கார நகரங்களில் சென்னைக்கு எந்த இடம்...?


இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு 6.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். பொருளாதாரத் தலைநகர் மும்பை 820 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன், பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பட்டியலில் சென்னைக்கு 7-வது இடம்.

World Wealth வெளியிட்ட தற்போதைய ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. மும்பை நகரில் மொத்தம் 46 ஆயிரம் லட்சாதிபதிகளும் 26 கோடீஸ்வரர்களும் வசிக்கின்றனர். நாட்டில் பணக்கார நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை டெல்லி பிடித்துள்ளது. இந்த நகரின் மொத்த சொத்து மதிப்பு 450 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 23 ஆயிரம் லட்சாதிபதிகளும் 18 கோடீஸ்வரர்களும் வசிக்கின்றனர். அடுத்த இடத்தில் இருப்பது பெங்களூரு. இந்த நகரின் மொத்த சொத்து மதிப்பு 320 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கிட்டத்தட்ட 7,700 லட்சாதிபதிகள் இங்கு வசிக்கின்றனர். 8 கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர்.

ஹைதரபாத் நகரின் மொத்த சொத்து மதிப்பு 310 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 9 ஆயிரம் மில்லியனர்களும் 6 பில்லியனர்களும் வசிக்கின்றனர். அடுத்த இடத்தில் கொல்கத்தா உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் தொழில் வளமிகுந்த நகரமாக இருந்த கொல்கத்தா தற்போது அதன் பெருமையை இழந்து நிற்கிறது. இந்த நகரின் சொத்து மதிப்பு 290 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இங்கு 9,600 மில்லியனர்களும் 4 பில்லியனர்களும் இருக்கின்றனர். காஸ்மோபொலிடன் நகரமான புனேயின் மொத்த சொத்து மதிப்பு 180 பில்லியன் டாலர்கள். இங்கு 4,500 மில்லியனர்களும் 5 பில்லியனர்களும் உள்ளனர்.

இந்தியாவின் 'டெட்ராயிட்' என்று அழைக்கப்படும் சென்னைக்கு இந்தப் பட்டியலில் 7-வது இடமே கிடைத்துள்ளது. நகரின் மொத்த சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சென்னையில் 6,500 மில்லியனர்களும் 4  பில்லியனர்களும் உள்ளனர். அடுத்த இடத்தை டெல்லி அருகேயுள்ள வளர்ச்சி பெற்று வரும் நகரமான  குர்கான் பெறுகிறது. 110 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட இந்த நகரில் 4 ஆயிரம் மில்லியனர்களும் 2 பில்லியனர்களும் வசிக்கின்றனர்.

இரண்டாம் கட்ட நகரங்களான சூரத், அகமதாபாத், விசாகப்பட்டினம், கோவா, சண்டிகார், ஜெய்ப்பூர், வதோரா நகரங்களில் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளது. இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பு கடந்த டிசம்பர் வரை 6.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரம் மில்லியனர்களும் 95 பில்லியனர்களும் உள்ளனர். இனி வரும் காலங்களில் இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறை, ரியல் எஸ்டேட், ஹெல்த் கேர், மீடியா, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி பெறப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹைதரபாத், பெங்களூரு, புனே போன்ற நகரங்களின் சொத்து மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

‘தென்னிந்தியாவை பொறுத்தவரை  சென்னைதான் பணக்கார நகரமாகவும் பொருளாதாரத் தலைநகராகவும் இருந்தது. ஆனால், ஐ.டி துறை வளர்ச்சி பெற்றபிறகு ஹைதரபாத், பெங்களூரு நகரங்கள் சென்னையை எளிதாக முந்தி விட்டன. தொழில்துறைகள் நலிவைச் சந்தித்தது சென்னை பின்தங்குவதற்கு ஒரு காரணம். தொழில் தொடங்குவதற்குக் கூட தமிழகத்தில் பல்வேறு இடையூறுகளை தொழில் முனைவோர்கள் சந்திக்க வேண்டியது இருக்கிறது என்று மற்றொரு ஆய்வு சொல்கிறது. இப்படி பல்வேறு காரணங்களால் தென்னிந்தியாவின் 'பொருளாதாரத் தலைநகர் என்ற அந்தஸ்த்தை சென்னை இழந்துள்ளது. துறைமுகம் இருப்பதால் இனி தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்ற பெருமை மட்டுமே சென்னைக்கு இருக்கும்.

மும்பையில் பாந்த்ரா, ஜுகு, டெல்லியில் வெஸ்ட் என்ட் கிரீன்ஸ், கிரேட்டர் கைலாஷ், சென்னையில் போயஸ் கார்டன், போட்கிளப் பகுதிகள் அதிக விலை கொண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment