கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் இராணுவத்தினருடன் நடாத்திய நீண்டநேரப் பேச்சுவார்த்தையின் பின்னர் காணிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் குறித்த பகுதியிலுள்ள இராணுவ முகாமில் இராணுவ உயரதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், காணிவெளிக்கள உத்தியோகத்தர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உள்ளிட்டவர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது காணிகளை அடையாளம் காட்டிய மக்கள் காணியை விரைந்து விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் பிரதேச செயலாளர் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் கூறியதாகவும், காணிகள் விடுவிக்கப்படும்வரை தாம் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments:
Post a Comment