வவுனியாவில் திடீரென தீப்பற்றிய வீடு!


வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் வீடொன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக சமயலறையிலிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. எனினும்  இவ்விபத்தில்  உயிர்ச்சேதமெதுவும்  ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி விபத்து எரிவாயு ஒழுக்கு அல்லது மின்னொழுக்கின் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என தெரிவித்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment