வாகரை பிரதேச சபை ஊழியர்கள் முகநூலுக்கு எதிராக போராட்டம்!


வாகரை கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் சபை முன்பாக கல்முனை திருகோணமலை பிரதான வீதியை மறிந்து வியாழக்கிழமை இடம்பெற்றது.

பிரதேச சபை ஊழியர்கள் கறுப்பு பட்டி அணிந்து பிரதேச சபை நுழை வாயிலை மூடி இரண்டு மணி நேரம் கடமை செய்யாது வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

அண்மையில் வாகரை பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்கள் மற்றும் மட்டக்களப்பு மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை விமர்சித்து போலி முகநூல் பக்கத்தில் வெளிவந்த செய்தியை எதிர்த்து இவ் கவனஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது செயலாளர் உத்தியோகத்தர்கள் ஊழியர்களை களங்கப்படுத்தாதே, எமது பிரதேச சபையின் பெயருக்கு பங்கம் விளைவிக்காதே, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடாதே, நல்லாட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதே, பிரதேச சபையின் முதுகிலே குத்தாதே, குள்ள நரி கூட்டங்களை உடனடியாக கைது செய் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

போலியான முகநூலில் பிரதேச சபைக்கு எதிராக வெளியிட்டவரை சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு கோரி பிரதேச சபை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ மற்றும் வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.இராகுலநாயகி ஆகியோரிடம் மகஜர் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது சபையின்; முன்னேற்றகரமான செயற்பாடுகள் குறித்து பிரதேச சபை ஊழியர்களால் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.

குற்றவாளிகளை இணங்கண்டு கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுச சனத் பியதாஸ தெரிவித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பிரதேச சபை நுழை வாயிலை திறந்து ஊழியர்கள் கடமைக்கு சென்றனர்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment