பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கும் சந்தோஷ் அவர்களுக்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இவ்வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் இந்த திருமணம் திடீரென நின்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து விஜயலட்சுமியின் தந்தை கூறுகையில், 'ஆம், நாங்கள் இந்த திருமணத்தை நிறுத்திவிட்டோம். வைக்கம் விஜயலட்சுமியின் எதிர்காலம் மற்றும் அவரது லட்சியத்தை கவனத்தில் கொண்டு இந்த திருமணத்தை நிறுத்திவிட்டோம் என்று அவர் கூறினார்.
முன்னதாக வைக்கம் விஜயலட்சுமி அவர்கள், திருமணத்திற்கு பின்னர் பாடக்கூடாது என்றும் இசை ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்று சந்தோஷ் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் திருமணத்திற்கு பின்னர் விஜயலட்சுமியின் வீட்டில் வாழ சந்தோஷ் சம்மதம் தெரிவித்ததாகவும், பின்னர் அவர் தனது நிலையில் இருந்து மாறியதால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment