ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் மற்றுமொரு ஐபோன் பதிப்பு!


ஆப்பிள் நிறுவனம் தனது கிளை ஒன்றினை இந்தியாவில் திறக்கின்றமை தொடர்பான தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அந்நிறுவனத்தின் புதிய கைப்பேசியான iPhone 8 ஆனது இந்தியாவில் வைத்தே தயாரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது iPhone SE பதிப்பும் இந்தியாவில் தயாராகவிருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இக் கைப்பேசி உற்பத்தி செய்யப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பதிப்பானது கடந்த வருடம் அறிமுகமாகியிருந்த போதிலும் மக்களிடையே காணப்படும் வரவேற்பு காரணமாக தொடர்ந்தும் வடிவமைத்து அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் எண்ணியுள்ளது.

இதன் காரணமாக சுமார் 300,000 தொடக்கம் 400,000 வரையான கைப்பேசிளை முதற்கட்டமாக வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவினை தளமாகக் கொண்டு செயற்படவுள்ள குறித்த நிறுவனத்துடன் இணைந்து தாய்வானின் Wistron நிறுவனமும் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment