ஆஸ்திரேலியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2வது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி, இறுதி பந்தில் பெற்ற அபாரமான வெற்றி மூலமாக 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை வெற்றி பெற்றுள்ளது .
போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 173 ஓட்டங்கள் பெற்றது.
பதிலுக்கு ஆடிய இலங்கை அணிக்கு அசேல குணரத்தன அபாரமாக விளையாடி ஆட்டம் இழக்காது 84 ஓட்டங்கள் அடித்து நம்பிக்கையூட்டினார், இதன்முலம் இலங்கை அணிக்கு இறுதி 3 ஓவர்களில் 48 ஓட்டங்கள் தேவைப்பட்ட்து.
18 வது ஓவரில் 12 ஓட்டங்கள் பெற்ற நிலையில், இறுதி 2 ஓவர்களில் இலங்கையின் வெற்றிக்கு 36 ஓட்டங்கள் தேவையாக இருந்த போது 19 வது ஓவரை வீசிய ஹென்றிக்ஸ் ஓவரில் அதிரடியாக விளையாடி 22 ஓட்டங்கள் பெற்றார்.
இதன்முலம் இறுதி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவையான நிலையில் முதலாவது பந்தில் நுவான் குலசசேகர ஆட்டம் இழந்தார். அடுத்த இரு பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலங்கையின் வெற்றிக்கு இறுதி பந்தில் 2 ஓட்டங்கள் தேவையான நெருக்கடி நிலைமையில் எக்ஸ்டரா கவர் திசையில் அற்புதமான பவுண்டரி அடித்து இலங்கையின் வெற்றியை அசேல குணரத்ன உறுதி செய்தார்.
இதன்முலம் 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி, அடுத்தடுத்து தென் ஆபிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து T20 தொடரை வெற்றிகொண்டு வரலாறு படைத்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் ஆட்ட நாயகனாக அசேல குணரத்ன தேர்வானார்.

0 comments:
Post a Comment