இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின பேரணி மற்றும் ஊர்வலம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, நாளை (திங்கட்கிழமை) யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்படவுள்ள பேரணி, யாழ் நகர் ஊடாக சென்று மீண்டும் பல்கலைக்கழக பகுதிக்கு வந்தடையவுள்ளது.
ஆசிரியர், அதிபர் பிரச்சினை உள்ளிட்ட கல்வித் துறையிலுள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு பகுதியில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தர அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த பேரணி நடப்படவுள்ளது.
இதற்கு யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் சேவை சங்கம் உள்ளிட்ட ஆறு அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

0 comments:
Post a Comment