'விவேகம்' படத்தின் செகண்ட் லுக் இதுதானா?


தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி தெறிக்க வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள அஜித் ரசிகர்கள் ஃபர்ஸ்ட்லுக்கை இரண்டு நாட்கள் டுவிட்டர் டிரெண்டில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நாளை அஜித்தின் பிறந்த நாளை ஒட்டி 'விவேகம்' படத்தின் செகண்ட்லுக் வெளிவரவுள்ளதாகவும், இந்த லுக் மாஸ் ஆக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தது.

ஆனால் சில நிமிடங்களுக்கு முன் அஜித்தின் அட்டகாசமான 'விவேகம்' ஸ்டில் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்லில் அஜித் ஒரு பெரிய மரக்கட்டையை தோளில் வைத்து ஆக்ரோஷமாக காணப்படுகிறார். இந்த மரண மாஸ் ஸ்டில்லுக்கு அஜித் ரசிகர்கள் மாபெரும் வரவே\ற்பு அளித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த ஸ்டில் இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் இல்லாததால், இந்த ஸ்டில் அதிகாரபூர்வ செக்ண்ட் லுக்கா? அல்லது ரசிகர்கள் ஆர்வத்துடன் உருவாக்கி வெளியிட்டதா? என்று தெரியவில்லை.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment