இலங்கை நேரப்படி இன்று(23) பிற்பகல் நான்குமணியளவில் இடம்பெற்ற போடடியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப்அணி அம்லாவின் அதிரடி அரைச்சத உதவியுடன் இருபது ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது. இதில் அம்லா ஒன்பது பவுண்டரிகள் இரு சிக்சர்கள் அடங்கலாக 40 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார். வேறுயாரும் சொல்லும்படியாக பிரகாசிக்கவில்லை. பந்துவீச்சில் ரை இரு இலக்குகளையும் ஸ்மித்,ஜடேயா,நது சங் மற்றும் அகர்வால் தலா ஒவ்வொரு இலக்குகளை சாய்த்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு தினேஸ் கார்த்திக் மட்டுமே அரைச்சதம் கடந்தார். இதில் கார்த்திக் ஆறு பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களையும் ரெய்னா 32 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். இறுதியில் குஜராத் அணி 26 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் பட்டேல், ஹரியப்பா மற்றும் சந்தீப் சர்மா தலா இரு இலக்குகளையும் மொகித் சர்மா ஒரு இலக்கினையும் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக அரைச்சதம் கடந்த ஹசிம் அம்லா தெரிவானார்.


0 comments:
Post a Comment