IPL மூலம் இந்திய கிரிக்கெட்டில் இடம்பிடிக்கப்போகும் வேகப்பந்து வீச்சாளர் யார் தெரியுமா?


IPL கிரிக்கெட் என்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்லாது சர்வதேச அணிகளுக்கும் தரமான கிரிக்கெட் வீரர்கள் பலரை அடையாளப்படுத்தியிருக்கிறது.

இந்தாண்டு IPL போட்டிகள் மூலம் இந்திய தேசிய அணியில் இடம்பிடிக்கப்போகும் அந்த வீரர் யார் என்கின்ற கேள்வி பரவலாக காணப்படுகின்றது.

குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடிவரும் பாசில் தம்பி அந்த வாய்ப்பை விரைவில் பெறுவார் என்று பலரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கேரளாவை சேர்ந்த 23 வயதான வேகப்பந்து வீச்சாளர் பாசில் தம்பி, இந்திய தேசிய அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டிவைன் பிராவோ அண்மையில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் கேரள அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான டினு ஜோஹனன் அதே கருத்தை முன்வைத்துள்ளார்.

பாசில் தம்பியின் பந்து வீச்சை உற்று நோக்குகின்றபோது, இந்திய தேசிய அணியில் அவரை எதிர்பார்க்கலாம் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment