அரியாலையூர் மிஷாந்தி செல்வராசாவின் ‘காகிதங்கள் பேசுதடி’ கவிதை நூல் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன்கலைக்கல்லூரியில் அரியாலை சக்தி கலாசார மன்ற இயக்குநர் . இராசையா மதிகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்அதிதிகளாக வட மாகாணசபை உறுப்பினர் கே.என். விந்தன் கனகரத்தினம் கலந்து சிறப்பித்தார் .நல்லூர் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் ஜாக்ரத சைதன்யா, அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் அறக்காவலர் ஐயாத்துரை குமரதாசன் ஆகியோரின் ஆசியுரையினைத் தொடர்ந்து வெளியீட்டுரையினை கம்பிகளின் மொழி பிறேமும் அறிமுகவுரையினை யாழ். பல்கலைக்கழக மருத்துவப்பீட உதவிப் பதிவாளர் திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வரனும் . நயப்புரையினை எழுத்தாளரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தருமான தர்மனி ரஜீவனும் நிகழ்த்தினார்.
கவிதை நூலினை நூலாசிரியர், நூலாசிரியரின் பெற்றோர், கம்பிகளின்மொழி பிறேம், காவலூர் அகிலன், விஜய் பதிப்பக உரிமையாளர் விஜய் ஆகியோர் வெளியீட்டு வைக்க வட மாகாணசபை உறுப்பினர் . கே. என். விந்தன் கனகரத்தினம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
















0 comments:
Post a Comment