திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா! (PHOTO )


வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

தெட்சண கைலாயம் எனப் போற்றப்படும் குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது, அங்கபிரதட்சணம், பலவகையான நடனங்கள் உட்பட மேலும் பல வழிபாடுகளும் இடம்பெற்றன.

இதன்போது, திருகோணமலை மற்றும் வெளி இடங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன், வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் தேர்த்திருவிழா, இலங்கையில் இடம்பெறும் முக்கிய தேர்த்திருவிழாக்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.






















Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment