முரளி குறிப்பிடும் IPL இன் சிறந்த பந்து வீச்சாளர் ..?


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவானாக முத்தையா முரளிதரன், IPL போட்டிகளில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றுகின்றார்.

அண்மையில் பேட்டியொன்றின்போது, IPL வரலாற்றில் மிக சிறந்த பந்துவீச்சாளர் யார் என்று முரளி குறிப்பிட்டுள்ளார்.

இறுதி ஓவர்களை மிக சிக்கமானமாகவும், சிறப்பாகவும் வீசவல்ல மும்பாய் இந்தியன்ஸ் அணியின் மலிங்க, சென்னை அணியின் வெற்றிகள் பலவற்றுக்கு காரணமான டிவைன் பிராவோ இவர்கள் எல்லோரையும்விட சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார சிறப்பானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இந்தியாவின் T20 தேசிய அணியில் விளையாடும் பதினொருவர் அணியில், இவரை இணைத்துக் கொள்வது குறைவு என்றும் முரளி தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment