இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று(25) நடைபெறவிருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பெங்களுர் ராயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
10 ஆவது இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பெங்களுர் ராயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான் போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெறவிருந்தது.
இந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
போட்டி கைவிடப்பட்டதால், பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், ஐதராபாத் அணி 9 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளது.


0 comments:
Post a Comment