IPL போட்டிகளின் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக திகழும் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுனில் நரைன் புதிய IPL சாதனை படைத்துள்ளார்.
தனது துல்லியமான சுழல் பந்து விச்சு மூலமாக கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றிகள் பலவற்றை தேடிக்கொடுத்த சுனில் நரைன், இம்முறை IPL போட்டிகளில் துடுப்பாட்டத்தில் மிரள வைக்கின்றார்.
ஆரம்ப வீரராக காம்பிருடன் இணைத்து ஆடுகளம் வரும் நரைன், அதிரடி ஆட்டத்தில் எல்லோரையும் மிரள வைக்கின்றார்.
இன்றைய தினத்தில் குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆரம்ப வீரராக வந்த சுனில் நரைன், அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யாவின் சாதனையொன்றை தகர்த்துள்ளார்.
IPL போட்டிகளில் அத்தனையும் பவுண்டரிகள் மூலமாக பெற்ற அதி கூடிய ஓட்ட எண்ணிக்கை எனும் சாதனை, இதுவரை சனத் வசமிருந்தது.மும்பாய் இந்தியன்ஸ் அணிக்காக விளையாயிடும் போது டெக்கான் சார்ஜஸ் அணிக்கெதிரான 2008 இல் இடம்பெற்ற IPL போட்டியில் பெற்ற 36 ஓட்டங்களையும் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் மூலமாக பெற்றிருந்தார்.
அந்த சாதனையை,இன்றைய போட்டியில் 17 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்த சுனில் நரைன் முறியடித்துள்ளார்.இவரது துடுப்பாட்டத்தில் 9 பவுன்டரிகளும் , ஒரு சிக்சரும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment